VOC Birthday Celebration 2017

செக்கிலுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன்
வ உ சிதம்பரனார் அவர்களின் 145வது பிறந்தநாள் விழா வ உ சி கபாடிக்குழு மற்றும் நேதாஜி இளைஞர் மன்றத்தால் கொண்டாடப்பட்டது.

 

Advertisements

Vinayagar Chadurti 2017

புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் தாலுகா பிலிப்பட்டி நேதாஜி இளைஞர் மன்றம் மற்றும் பிலிப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெறும்
இரண்டாம்  ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா 

அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான ஸ்ரீ துர்முகி வருடம் ஆவணி மாதம் 9ம் தேதி 25.08.2017 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்குமேல் 10.30 மணிக்குள் விநாயகர் திடலில் விநாயகர் 5 அடி சிலை வைத்து மூன்று நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் 11ம் தேதி 27.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஸ்ரீ விநாயகர் சிலைக்கு அபிசேக ஆராதனை செய்த பின் விநாயகர் திடலில் இருந்து புறப்பட்டு பிடாரி அம்மன் கோவில், பேருந்து நிலையம், சத்திரம், ஊரணி, பாறை, வடக்கி தெரு, வா உ சி மைதானம், நேதாஜி இளைஞர் மன்றம், பூமாரி அம்மன் கோவில், 7Star மைதானம் வழியாக வலம் வந்து பிடாரி அம்மன் குளத்தில் விடப்படும். மேற்படி விழாவில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு நிதியுதவி, பொருளதவி அளித்து ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளைப்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு
ஸ்ரீ விநாயக திருப்புகழ் சபை
வார வழிபாட்டு சபை மற்றும் நேதாஜி இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள்
பிலிப்பட்டி.















Vinayagar Chadurti Festival

புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் தாலுகா பிலிப்பட்டி நேதாஜி இளைஞர் மன்றம் மற்றும் பிலிப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெறும்
முதலாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்

அன்புடையீர்!
நிகழும் மங்களகரமான ஸ்ரீ துர்முகி வருடம் ஆவணி மாதம் 20ம் தேதி 05.09.2016 திங்கள்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் விநாயகர் திடலில் விநாயகர் 5 அடி சிலை வைத்து மூன்று நாட்கள் பூஜைகள் நடைபெறும். ஆவணி மாதம் 22ம் தேதி 07.09.2016 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஸ்ரீ விநாயகர் சிலைக்கு அபிசேக ஆராதனை செய்த பின் விநாயகர் திடலில் இருந்து புறப்பட்டு பிடாரி அம்மன் கோவில், பேருந்து நிலையம், சத்திரம், ஊரணி, பாறை, வடக்கி தெரு, வா உ சி மைதானம், நேதாஜி இளைஞர் மன்றம், பூமாரி அம்மன் கோவில், 7Star மைதானம் வழியாக வலம் வந்து பிடாரி அம்மன் குளத்தில் விடப்படும். மேற்படி விழாவில் பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு நிதியுதவி, பொருளதவி அளித்து ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளைப்பெற அன்புடன் அழைக்கிறோம்.
இப்படிக்கு
ஸ்ரீ விநாயக திருப்புகழ் சபை
வார வழிபாட்டு சபை மற்றும் நேதாஜி இளைஞர் மன்றம், ஊர் பொதுமக்கள்
பிலிப்பட்டி.















Abdulkalam Memorial Day Program

மறைந்த முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அப்துல்கலாம் பற்றிய தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து அதன்பின் நேதாஜி  இளைஞர் மன்ற  உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்த்து மவுன அஞ்சலி செலுத்தி முடித்துக்கொண்டோம்,





Abdulkalam Memorial Day Program

Village Festival Meetting Arraged Program

பிலிப்பட்டியில் சுமார் நான்கு வருடம் நடைபெறாமல் இருந்த திருவிழாவிற்கு ஒற்றுமையின்னைதான் காரணம் அதனை சரிசெய்ய பொதுக்கூட்டம் நேதாஜி இளைஞர் மன்றம் மூலம்  ஏற்ப்பாடு செய்தோம் அதில் திருவிழா நடைபெற வேண்டும் அதற்கான வழிமுறைகளை பற்றி பெரியோர்கள் கலந்து யோசித்து முடிவெடுங்கள் என கூறினோம் அவர்கள் அனைவரும் கலந்துரையாடல்செய்து திருவிழா நடத்த முடிவெடுத்தனர் அதற்கான வழிமுறைகளை அனைவரும் முன் கூறினார்கள் அனைவரின் சம்மதத்துடன் திருவிழா நடத்த முடிவெடுக்கப்பட்டது இத்துடன் கூட்டம் முடிக்கப்பட்டது வருகை தந்த  அனைவரையும் நன்றி கூறி வழியனுப்பினோம்.

img_20160824_073124465_hdr1Village Festival Meetting Arraged Program

Republic day Cricket Tournament Program

67வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக பிலிப்பட்டி நேதாஜி இளைஞர் மன்றம் 7STARBOYSCRICKETCLUB இணைந்து நடத்திய கிரிக்கெட் திருவிழாவில் 24  அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டியில்       விராலிமலை படையப்பா அணியினர் முதல் பரிசை  பெற்றனர் .


Republic day Cricket Tournament Program

Street light’ve Problem Checked Solve Program

புதுக்கோட்டை மாவட்டம்    விராலிமலை ஒன்றியம்  கோங்குடிப்பட்டி   ஊராட்சி பிலிப்பட்டி கிராமத்தில் நேதாஜி இளைஞர் மன்றம்  கிராமம் மக்களின் ஆதரவுடன் எரியாத தெருவிளக்குகளை சரிசெய்து அதனை புதுபித்து எரிய செய்து தெருவிளக்கினை அமைத்து கொடுத்தோம்.அதற்கான செலவுதொகையினை நன்கொடை மூலம் மக்களிடம் பெற்று செலவு செய்தோம்.